உயிரிழந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்..! 

நாட்டையே உலுக்கி எடுத்துள்ள பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க  வேண்டும் என நாடு முழுக்க குரல் எழுந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து இதுவரை 44 பேர் இறந்துவிட்டனர். 

இதில் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2 தமிழக வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த  கொடூர தாக்குதலுக்கு முதல்வர் எடப்பாடி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தகுடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளார்