செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்த 2 இளைஞர்கள்... செல்பி எடுக்கையில் நேர்ந்த விபரீதம்!!
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்ற இரு இளைஞர்கள் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்ற இரு இளைஞர்கள் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். 20 வயதான இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு... புதிய பொறுப்புத் தலைமை நீதிபதி நியமனம்!!
அங்கு சென்ற இவர்கள் ஏரிக்குள் இறங்கி செல்பி எடுத்துள்ளனர். அப்போது இதில் எதிர்பாராத விதமாக இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தவறி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்க அங்கிருந்த மக்கள் போராடியும் அவர்களை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதுக்குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்க முயன்றனர்.
இதையும் படிங்க: குழந்தைகள் உயிரோடு விளையாடும் ஸ்டாலின் அரசு... கையாலாகாத சுகாதாரத்துறை.. டார் டாரா கிழிக்கும் சீமான்.
ஆனால் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.