திருச்சங்கோடு அருகே 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருச்சங்கோடு அருகே உள்ள பாட்டலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் 2002 ஆம் ஆண்டு பட்டா சிட்டா நகல் வாங்க கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்திடம் கேட்டுள்ளார்.

பட்டா சிட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் செல்வத்திடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் செல்வம் விஏஓவிடம் லஞ்சப்பணமாக 500 ரூபாயை கொடுத்தார்.

மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடாசலத்தை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து விஏஒ வேங்கடசலத்தை போலீசார் கைது செய்தனர்.