2 lakhs worth Computers theft in private school

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில், தனியார் பள்ளியில் இருந்து ரூ.1 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கணினிகள் திருடு போனது. இதுகுறித்து விசாரிக்கும்போது பள்ளியின் கட்டிட வேலைக்கு வந்தவர்கள் திருடி சென்றனர் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறளரசன் மற்றும் ரவி இருவரையும் காவலாளர்கள் ஓசூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அங்கு அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டு ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கட்டிட வேலைக்காக வந்தவர்கள் பள்ளியில் கதவை உடைத்து கணினிகளை திருடிச் சென்ற சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.