கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி!

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 

இவருடைய மனைவி ராதாவுக்கு கைலாசம் என்பவரோடு முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், இருவரும் சேர்ந்து புஷ்பராஜை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய நீதிபதி, புஷ்பராஜின் மனைவி ராதா, கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய காதலன் கைலாசம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

சிறுமியை பலாத்காரம் செய்த இரண்டு சிறுவர்கள் கைது!

நெடுஞ்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் 17 வயதான சிறுவர்கள் முத்துகிருஷ்ணன், ஸ்ரீபன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது திருமணம் செய்த கணவனை கைது செய்ய இளம் பெண் தர்ணா!

எர்ணாவூரைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவருடைய மகள் சுதா. எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், திருவொற்றியூர் கிராம தெருவைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார்.

எம்.பி.ஏ. படித்துள்ள நிர்மல்குமார், ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வந்தார். திருமணமான சில நாட்களில் நிர்மல்குமார், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் சுதாவுக்கு தெரியவந்தது.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடத்தில் சுதா, கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நிர்மல்குமார், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மயூரிபிரியா என்ற பெண்ணை திருப்போரூர் கோவிலில் வைத்து 3-வது திருமணம் செய்துகொண்டார். இதையறிந்த சுதா, நேற்று தனது உறவினர்களுடன் கணவர் வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். பின்னர் தனது மகள் நவீனாவுடன் கணவர் வீட்டுமுன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுதா, “3-வது திருமணம் செய்து கொண்ட கணவரை கைது செய்ய வேண்டும். எங்கள் திருமணத்தின்போது எனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த 65 பவுன் நகை, ஒரு கார், ஏ.சி. ஆகியவற்றை திருப்பி வாங்கித்தர வேண்டும்” என்றார்.

இதையடுத்து போலீசார், நிர்மல்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக கூறி விட்டு தர்ணாவை கைவிட்டு சுதா, தனது மகளுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

மாணவனுடன் உல்லாசமாக இருந்த வீடியோ எடுத்து வைத்து  மிரட்டிய ஆசிரியை!

ஆக்ராவை சேர்ந்தவர் 15 வயது சிறுவன் ஒருவர், கச்சேரி கேட் பகுதியில் உள்ள ஒரு கல்வி பயிற்சி சென்டரில் சேர்ந்தார்.அவருக்கு நிதின் சிங்கால் மற்றும் அவரது சகோதரி ரூச்சி சிங்கால் ஆகிய இருவரும் கல்வி பயிற்சி அளித்துள்ளனர். இந்தநிலையில், ஒரு நாள் அந்த மாணவனுக்கு ரூச்சி மற்றும் அவரது சகோதரி அஞ்சலி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மாணவனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர்.

ஆசிரியைகள் கொடுத்த குளிபானத்தை அருந்தியதால் மாணவன் மயக்கமடைந்துள்ளான். இதனை அடுத்து மாணவனின் ஆடையை களைந்து சிறுவனை ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர்,அந்த படத்தை மாணவனிடம் காட்டி  இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி ரூ.4 ஆயிரம் வாங்கியிருக்கிறார்கள். சில நாட்களுக்குப் பின் மேல் என்னிடம் பணம் இல்லை என மாணவன் அழுது புலம்பவே சமாதானமான பெண்கள், மாணவனை காட்டாயபடுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து கட்டாய உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

பின், அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அவரிடம் பணம் பறித்துள்ளனர். அந்த மாணவன் வீட்டில் இருந்த தங்க நாணயத்தை திருடி வந்து கொடுத்துள்ளான். அவர்களின் தொல்லை எல்லை மீறியதால் அந்த மாணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டான்.நடந்த அனைத்தையும் அந்த மாணவன் வாகுமூலமாக கொடுத்துவிட்டான். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில், ரூச்சி சிங்கால் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து பல மாணவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது பாலியல் குற்றம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.