18 வகையான போட்டி தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி உத்தேச தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 18 வகையான போட்டி தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் தற்போதைய நிலை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விவரம், டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியானது.
அதில் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கான குரூப் 2 பிரதான தேர்வு முடிவு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை தொழில் பழகுனர் பணி தேர்வு, தமிழக அரசு துறைகளில் உதவி பிரிவு அதிகாரி பணி தேர்வு, குரூப் 3 பதவிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த புள்ளியியல் பணித் தேர்வு, மீன் வளத்துறை ஆய்வாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகின்றன.
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சுயமாக முடிவெடுப்பது நல்லதல்ல… அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை
பொறியியல் பதவியில் 1083 பாலி பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சாலை ஆய்வாளர் பதவி தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகின்றன. அதே போன்று கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவி, மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான முதல் நிலை தகுதித் தேர்வு, வனத்துறை உதவி காவலர், நூலகத்துறை பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு ஜூலை மாத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் மீது லாரி மோதி விபத்து; கணவன், மனைவி உடல் நசுங்கி பலி - சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு