1750 litres liquor seized and delivered to police

விழுப்புரம் அருகே பதுக்கபட்ட 1750 லிட்டர் கள்ளச்சாராயத்தை ஊர்மக்கள் பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கரிப்பாளையம் பொதுமக்களுக்கு தகவல் வந்தது. இதையறிந்த அப்பகுதிவாசிகள் மரக்காணம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 1750 லிட்டார் கள்ளச்சாராயம் 50 கேன்களில் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 50கேன்களில் பதுக்கி வைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை கரிப்பாளையம் ஊர் பொதுமக்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசாரிடம் கள்ளச்சாரயாத்தை ஒப்படைத்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.