சேலம்

சேலத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணமான அன்றே அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் பெண் வீட்டார்  மற்றும் மாப்பிளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். 

salem district க்கான பட முடிவு

சேலம் மாவட்டம், கொளத்தூர், சத்யாநகரைச் சேர்ந்த சிறுமி மாலதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், ஈரோட்டில் உள்ள அந்தியூரில் வசிக்கும் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவ்விருவருக்கும் கோவிந்தபாடியில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படியே, நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணமும் நடந்தது. திருமணம் நடந்துமுடிந்த பந்தி பரிமாறும் நேரத்தில் புதுமணப் பெண் மாலதி தனக்கு வயிறு வலிக்கிறது என்று அலறினார். 

indian marriage க்கான பட முடிவு

இதனால் பதறிய உறவினர்கள் மாலதியை, கொளத்தூரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் சோதித்துவிட்டு மாலதி கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் இன்னும் சில மணி நேரங்களில் குழந்தை பிறந்துவிடும் என்றும் தெரிவித்து உறவினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.  பின்னர், மாலதியை பிரசவ வார்டில் அனுமதித்தனர். 

born baby க்கான பட முடிவு

அங்கு நேற்று முன்தினம் இரவே மாலதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த தகவல் மாப்பிள்ளை வீட்டாரும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

திருமணமான அன்றே புதுமணப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு உண்டாக்கியது. இதுகுறித்து கொளத்தூர் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.