1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளின் பணி நாட்கள் தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஆண்டில், பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை நாட்களாகின்றன. இதிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் பண்டிகை மற்றும் மழைக்கால விடுமுறையாக தரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே அதற்கேற்ப பாட அட்டவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு, ஏப்ரல், மே மாதங்களில் மொத்தமாக 47 நாட்கள், கோடை விடுமுறையும், பொது தேர்வுக்கான விடை திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தனியாக ஊதியமும் வழங்கப்படுகிறது.