Asianet News TamilAsianet News Tamil

15 சதவீதம் இடஒதுக்கீடு போதாது - உயர் நீதிமன்றைத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் மனு

15 percentage reservation is not enough - cbse students petition in high court
15 percentage reservation is not enough - cbse students petition in high court
Author
First Published Jun 29, 2017, 2:08 PM IST


நீட் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கையில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 15 சதவீத இடஒதுக்கீடு போதாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி புஷ்பா நாராயணன் மனுவை ஜூலை 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீட் தேர்வு

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெற உச்ச நீதிமன்றத உத்தரவின் பேரில் நீட் தேர்வை இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. 

நாடு முழுவதும் கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு எழுத 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்தார்கள். இதில் 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

88 ஆயிரம் பேர்

தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதியதினர். மொத்தம் 65,000 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 23,000 பிடிஎஸ் இடங்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

85 சதவீம் ஒதுக்கீடு

நீட் தேர்வு முடிவுகளின் தர வரிசை பட்டியலில் ஒரு தமிழக மாணவர் முதல் 25 இடங்களில்  ஒருவர் கூட இடம்பெறவில்லை. தமிழக மாணவர்கள் நிலைமை நீட் தேர்வில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், சிபிஎஸ்இ திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் வழங்கப்படும் என்றும் கடந்த 22-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

விண்ணப்பங்கள் வினியோகம்

கடந்த 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கின. விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஜூலை 7-ஆம் தேதி யாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ இயக்குநரகத்துக்கு ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

15 percentage reservation is not enough - cbse students petition in high court வழக்கு

இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டு அரசாணையை எதிர்த்து தஞ்சையை சேர்ந்த சி.பி.எஸ்.இ.

மாணவர் தார்ணீஷ் குமார்சார்பில் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-

அதிகாரமில்லை

அதில் தமிழக அரசு பிறப்பித்த உள் ஒதுக்கீட்டால் என்னை போன்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர்.  

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய மட்டும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாட திட்டம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அதிகாரம் இல்லை.

ரத்து செய்ய வேண்டும்

தமிழகத்தில் 4,220 மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ.தேர்வு எழுதி இருக்கிறார்கள். ஆனால், மாநிலப் பாடப்பிரிவில் 4.20 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர்.

நீட் தேர்வில் பெருமபாலும் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் இருந்து வந்துள்ளன. அது மாநிலபாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு சாதகமில்லாமல் போனது.

அதற்காக சி.பி.எஸ்.இ. பிரிவில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம், மாநிலப்பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் என ஒதுக்கீடு செய்வது நியாமல்ல. அதனால் இந்த ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் தெரிவிக்கையில், “ அரசு தரப்பு விளக்கம் கேட்காமல் எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன் எனக்கூறி விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து’’ உத்தரவிட்டார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios