திருநெல்வேலி மாவட்டத்தில் ராம ராஜய் ரதயாத்திரையை தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிடுள்ளார். 

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து நாளை காலை தமிழகம் வருகிறது.

இன்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நாளை காலை நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

புளியரை வழியாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வழியாக நாளை மதியம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகிறது. இதனிடையே தென்காசியில் காசிவிஸ்வநாதர் கோயில்முன்பு வரவேற்பளிக்கப்படுகிறது.

நாளை 20ம் தேதி இரவு மதுரையை அடைந்து, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது.

ரத யாத்திரைக்கு சில அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில் இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை 6 மணியில் இருந்து வரும் 23ம் தேதி காலை மணிவரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.