சென்னை மெரினா கடற்கரையில் அடுத்த 14 நாட்களுக்கு 144 தடை விதித்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி மெரினா கடற்கரையில் கூட்டம் கூடுவதோ , மனித , சங்கிலி உண்ணாவிரதத்துக்கோ தடை விதிக்கப்படுகிறது.

சென்னை மாநர காவல் துறை கூடுதல் ஆணையர் சங்கர் செய்தியாளளிடம் பேசியதாவது:
கடந்த 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை இளைஞர்கள் போராட்டம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளோம்.கடந்த 17ம் தேதி வாட்ஸ் ஆப் குழு மூலம் உருவான குழு ஒன்று மெரினாவில் கூடுகிறது.

அந்த இளைஞர்கள் குழு, முதலில் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்க வேண்டும் என்றனர். அவர்கள் பிற்பகலிலேயே விடுவிக்கப்பட்டனர்.அதன்பின்னர் ஜல்லிக்கட்டு குறித்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.
அதன்படி இன்று இரவு 2 அமைச்சர்கள், மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக முதல்வர் அறிக்கை விட வேண்டும் என கூறினார்.
அதன்படி முதல்வர் மறுநாள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து, ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து முதல்வர் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்தார்.
அன்று அங்கே தங்கி இருந்து அவசர சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும் அவசர சட்டம் ஒரிரு நாளில் கொண்டு வருவோம் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

அது குறித்து போலீசார் தரப்பிலும் மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.ஆனால் மாணவர்கள் எங்கள் கருத்தை கேட்டு கலைந்து செல்ல தயாரக இருந்தனர். ஆனால் கூட்டத்தில் புகுந்த சில சமூக விரோதிகள் கலைந்து செல்ல மறுத்தனர்.
மேலும் அவர்கள் 26ம் தேதி குடியரசு தினம் வரை போராட்டத்தை தொடரவும். அதன் மூலம் குடியரசு தினத்தை கொண்டாட முடியாத அளவிற்கு முயற்சி செய்தனர். அவசர சட்டம் கொண்டு வரும் வரை அங்கே தான் இருப்போம் என்றனர்.
அதுவரை போலீசார் அவர்களிடம் பொறுமையாகவே இருந்தனர். அதனை தொடர்ந்து அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னரும் அவசர சட்டத்தில் கவர்னர் கையெழுத்து இல்லை என குறை கூறினார்.

அப்போது போலீசார் அறுவுரை கூறிய பின்னர் மாணவர்கள் பலர் கலைந்து சென்றனர். ஆனால் ஒரு சில மெரினா கடல் நோக்கி சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் போலீஸ் தடியடி நடத்தியதாக தவறான பரப்பினர்.
அதனை தொடர்ந்தே அங்கிருந்த நடுகுப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த போலீசாருக்கு எதிராக கல்கள், பெட்ரோல் குண்டு ஆகியவை வீச தொடங்கினர். அதன் பின்னரே போலீசார் சட்ட ஒழுங்கை காப்பற்ற நடவடிக்கை எடுத்தோம்.

தீ வைத்தாக கூறப்படும் காவலர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மீது திங்கட் கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கமிஷனர் சேஷாயி....கூறியதாவது:

5 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெரினா சுற்றி உள்ள பகுதிகளான மெரினா காவல் நிலையம், மயிலாப்பூர், ஐஸ் கவுஸ், திருவல்லிகேணி, பட்டினம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை விதிக்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் கூடுவது சட்டவிரோதம். அதே சமயத்தில் மெரினாவிற்கு, குடும்பத்துடன், அல்லது நடப்பயிற்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12 வரை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
