12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு
12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதிதாக பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். ராஜாராமன் ஐ.ஏ.எஸ். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணி மாறுதல் பெற்றுள்ளார். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராக ஆனந்த் குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். தொழில்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கலையரசி ஐ.ஏ.எஸ். சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேங்கடபிரியா ஐ.ஏ.எஸ் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராகவும் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.
ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை திட்ட அலுவலர் பணிக்கு மோனிகா ராணி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரி சரவணன் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.