கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஐஐடியில் கடந்த 6 நாட்களில் 111 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக இழந்திருந்தனர். அம்மா, அப்பா, சகோதரர், என யாரையாவது ஒருவரை இழந்து ஆதரவற்ற நிலையில் பெரும்பாலான குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக மாறி இருந்தது. இந்தநிலையில் கடந்த4 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறது. மாவட்டங்களில் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை தயார் செய்யுமாறும் கூறியுள்ளது.

ஐஐடியில் கொரோனா பரவல் தீவிரம்
இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் மெல்ல மெல்ல பரவிய கொரோனா தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் 15 பேருக்கு என முதலில் பரவிய கொரான தற்போது 111 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் தொடர்ந்து நோய் கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐஐடியில் நேற்று 79 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை மேலும் 32 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது என்றார்.சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 7490 மாணவர்களில் 3080 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 3080 பேரில் 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 சிகிச்சையில் உள்ளனர் என கூறினார். தற்போது ஐஐடி விடுதியில் மருந்து தெளிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

9 மாவட்டங்களில் கொரோனா
தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 27 மாவட்டங்களில் தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது. 1 கோடியே 48 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார். இந்தநிலையில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தான் முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே வரும் நாட்களில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்.!
