அரசு மெத்தனம்... மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 110 பேர் அட்மிட்! பீதியில் பொதுமக்கள்!!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 35க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

110 people were admitted on a one day for mysterious fever

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 35க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 110 people were admitted on a one day for mysterious fever

காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும், காய்ச்சல் காரணமாக மக்கள் கூட்டம் தினமும் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதையொட்டி, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 30 குழந்தைகள் உள்பட 110 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு அறிகுறி உள்ளவர்களை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 110 people were admitted on a one day for mysterious fever

இதே போல திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டரா பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவியுள்ளது. ராயம்பாளையத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். அவனை அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 110 people were admitted on a one day for mysterious fever

மேலும், காமராஜர் நகரை சேர்ந்த 3 சிறுமிகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, அதே பகுயில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை  அளிக்கப்படுகிறது. சேவூரில் 14 வயது சிறுமி, அவரது சகோதரன் ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம், அருகே பொங்கலூர் உள்பட பல பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சேர்ந்துள்ளனர். இதனால், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios