Ration Shop Holidays :பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

Ration Shop Holidays List: 2025ம் ஆண்டில் பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற விழா நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

11 days holiday for ration shops in Tamil Nadu tvk

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. தமிழக டுழுவதும் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் மூலமாக 7 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 572 பயனாளிகள் பயன் அடைந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நியாய விலைக் கடைகளில் 3,440 காலிப்பணியிடம்.! எப்போது பணி ஆணை - அமைச்சர் முக்கிய அறிவிப்பு

இந்நிலையில், 2024ம் ஆண்டு முடிய இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் 2025ம் ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதை பார்ப்போம். 

அந்த வகையில், ஜனவரி 14 பொங்கல் பண்டிகை  (செவ்வாய்), ஜனவரி 26 குடியரசு தினம்  (ஞாயிறு), பிப்ரவரி 11 தைப்பூசம் (செவ்வாய்), மார்ச் 31 ரம்ஜான் (திங்கள்), ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் (திங்கள்).

இதையும் படிங்க: இவ்வளவு பேசுறீங்களே! அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்குங்க! வானதி சீனிவாசன்!

மேலும் மே 1 தொழிலாளர் தினம் (வியாழன்), ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (வெள்ளி), ஆகஸ்ட் 27 விநாயகர் சதூர்த்தி (புதன்), அக்டோபர் 02 விஜயதசமி/ காந்தி ஜெயந்தி (வியாழன்), டிசம்பர் 25 கிருஸ்துமஸ் (வியாழன்) உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் இயக்காது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios