ஈரோட்டில் சதமடித்த வெயில்.. தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. நீடிக்குமா? நீடிக்காதா? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்கள் கோடை காலம் தொடங்க இருக்கும் சூழலில் தற்போதே கோடை காலத்தை நினைவூட்டும் வகையில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலும் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அதற்கு பின்னர் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பொழியலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பிப்ரவரி 7 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன் அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்ப நிலை 31 - 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். இன்று தமிழகத்தில் ஈரோட்டில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 91.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..