தமிழகத்தை சேர்ந்த 10 பேர் அதிரடி கைது ..! சுற்றி வளைத்து பிடித்த ஆந்திர போலீஸ்..! 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வனப்பகுதியில் செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது.

ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 19 செம்மரக் கட்டைகள் பறிமுதல்...!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோடுர் பால பள்ளி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று மாலை முதல் ரோந்து பணி மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை குன்ஐனா வனப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட செம்மர கூலிகள் செம்மரங்களை வெட்டி சுமந்து சென்றுகொண்டிருந்ததை பார்த்து உள்ளனர் 

இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முயன்றபோது செம்மரங்களை போட்டுவிட்டு பலர் தப்பியோடி உள்ளனர். தப்பிச் சென்றவர்களில் 10 பேரை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்கள் தர்மபுரி  மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாராம், வீரப்பன், பெருமாள் செல்வம், மாதேஷ், நடராஜ் கோவிந்தன் தங்கவேல் பெருமாள், சின்ன ராமன் பழனி, சிட்டி ராஜ், பெருமாள்,கணேசன் என தெரியவந்தது. 

இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் கடத்தல் கும்பல் விட்டுச்சென்ற ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 19 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து வனப்பகுதியில் தப்பிச்சென்ற மற்ற நபர்களை தேடி வருகின்றனர்