MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஏப்ரல் 21 முதல் 23ம் தேதி வரை தடை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 21 முதல் 23ம் தேதி வரை தடை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, ஏப்ரல் 21 முதல் 23 வரை 48 மணி நேரத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 03 2026, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்பட எந்தவொரு விவரத்தையும் வரும் 21 முதல் 23ம் தேதி வரை அதாவது 48 மணி நேரத்திற்கு காட்சிப்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அட்டவணையையும், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதி வௌியிட்டது.

25
Image Credit : Google

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 126-ன் படி, எந்தவொரு தேர்தல் ஒரு வாக்குச்சாவடி பகுதியில் நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக உள்ள நாற்பத்தெட்டு மணிநேர காலத்தில் (அமைதிக்காலம்), தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற பிற சாதனங்கள் வாயிலாக தேர்தல் தொடர்பான எந்தவொரு விவரத்தையும் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்
Related image2
அமமுக முக்கிய பிரமுகர்களை மொத்தமாக தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
35
Image Credit : ChatGPT

அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவும், ஏப்ரல் 7ம் தேதி மாலை 5 மணி முதல் 09ம் தேதி மாலை 5 மணி வரையும், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவும், ஏப்ரல் 7ம் தேதி மாலை 6 மணி முதல் 09ம் தேதி மாலை 5 மணி வரையும் பிரச்சாரம் ஓய்வுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவும், ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் 23ம் தேதி மாலை 6 மணி வரையும் ஓய்கிறது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 23 வாக்குப்பதிவும், ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் 23 மாலை 6 மணி வரையும், ஏப்ரல் 27ம் தேதி மாலை 6 மணி முதல் 29 மாலை 6 மணி வரை பிரச்சாரம் ஓய்வுகிறது.

45
Image Credit : our own

தொலைக்காட்சி/வானொலி அலைவரிசைகள்மற்றும் கேபிள் நெட்வொர்க்குகள், மேலே குறிப்பிடப்பட்ட காலத்தில் தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது தேர்தலின் முடிவை பாதிக்கக்கூடிய வகையில் அமைப்பாளர்கள்/பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்/வேண்டுகோள்கள் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது. இதில் கருத்துக் கணிப்புகளை (Opinion Poll) வெளியிடுவதும் அடங்கும்.

55
Image Credit : pinterest

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126A-ன் கீழ், ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) காலை 7:00 மணி முதல் ஏப்ரல் 29, 2026 (புதன்கிழமை) மாலை 6:30 மணி வரை, வாக்குக் கருத்துக்கணிப்புகளை (Exit poll) நடத்துவதும், அதன் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இப்பிரிவை மீறுவது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும். அனைத்து ஊடக நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை அதன் சாராம்சம் குறையாமல் பின்பற்றுமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்தல்
இந்தியா
தேர்தல் முடிவு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் - அறிவுரை சொன்ன துரை வைகோ
Recommended image2
Now Playing
திமுகதான் கோயிலை பாதுகாக்கும்.! இதெல்லாம் செய்வோம் என பட்டியல் போட்ட கனிமொழி.!
Recommended image3
அமமுக முக்கிய பிரமுகர்களை மொத்தமாக தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
Related Stories
Recommended image1
தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்
Recommended image2
அமமுக முக்கிய பிரமுகர்களை மொத்தமாக தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved