பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், வெனிசுலாவில் 61 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுள்ளதற்கு, பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.05-க்கு விற்பனையாகிறது பெட்ரோல் - டீசல் விலை நிலவரம், வாகன ஓட்டிகளுக்கு தினமும் ப்ளட் பிரஷ்ஷரை அதிகப்படுத்தவே செய்கிறது.

பெட்ரோல் - டீசல் விலையேற்றம் காரணமாக வாகனத்தை விட்டு விட்டு, பேருந்தில் செல்லலாம் என்று நினைத்தால், பேருந்து கட்டணமே கையைக் கடிக்கிறது. 

ரயில் பயணம் செய்யலாம் என்று நினைத்தாலே, அந்த கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாவதை நினைத்தாலே உடம்பும், மனதும் நடுங்குகிறது. 

ரூ. 84.05-க்கு இன்று விற்கப்படும் பெட்ரோல் விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.23.94 ஆக இருந்தது. 1998 ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 சதவிகிதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இந்தியா முழுவதும் கடந்த 10 தேதி அன்று எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், பிரபல பிரபல தொலைக்காட்சி வெப்சைட் ஒன்று வெனிசுலா, ஈரான், சூடான் உள்ளிட்ட 12 நாடுகளில் பெட்ரோல் விலை குறித்த விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதல், வெனிசுலா ரூ.0.61 காசுகளுக்கும், ஈரான், ரூ.20.47 காசுகளுக்கும், சூடான் ரூ.24.51 காசுகளுக்கும், குவைத் ரூ.24.90 காசுகளுக்கும், அல்ஜீரியா ரூ.25.49 காசுகளுக்கும், பாகிஸ்தான் ரூ.54.11 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.88.12 காசுகளுக்கும், பார்படாஸ்-ல் ரூ.140.16 காசுகளுக்கும், நெதர்லாந்தில் ரூ.140.30 காசுகளுக்கும், நார்வேயில் ரூ.145.26 காசுகளுக்கும், ஐஸ்லாந்தில் ரூ.146.10 காசுகளுக்கும், ஹாங்காங்-ல் ரூ.155.13 காசுகளுக்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தால் கடுப்பாகியுள்ள இந்திய வாகன ஓட்டிகளுக்கு இந்த பட்டியல் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு பற்றி எதிர்கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். 

வெனிசுலாவில் 61 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்வதால், உடனே நம்ம போராளிகள் வெனிசுலாவை தூக்கி வைத்து ஆடுவாங்க என்றும், இது முட்டாள்தனமான கால்குலேஷன் - அந்தந்த நாட்டு பொருளாதாரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.