விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்... ஆட்சியரின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன?
விழுப்புரத்தில் மே.1 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மே.1 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பல முக்கிய தினங்களிலும் பொதுவிடுமுறை நாட்களிலும் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். மேலும் தேர்தல் நேரங்களில் மதுக்கடைகள் அன்மைகாலங்களாக மூடப்பட்டு வருகின்றன. இதுக்குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பர்.
இதையும் படிங்க: ஓசூர் காய்கறி சந்தையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; காவல்துறை விசாரணை
மேலும் அந்த நாட்களில் தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த நிலையில் விழுப்புரத்தில் மே.1 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 30 மாதம் சம்பள பாக்கி; போராட்டத்தின் போது பூச்சி மருந்தை குடித்த அரசு ஊழியர்கள்
இதுக்குறித்த அவரது அறிவிப்பில், மே.1 ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள் வரும் திங்கட்கிழமை இயங்காது. அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.