Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து களம் காணும் பாமக? அன்புமணி பதில்

நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்வதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK leader Anbumani has said that a decision will be taken in 2 days about contesting the Vikravandi by-election vel

வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாடு இரண்டு நாட்களில்  நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய முடிவை தெரிவிப்போம் என்றார்.

சாரை பாம்பை தோல் உரித்து சமைத்து சாப்பிட்ட திருப்பத்தூர் பியர்கிரில்ஸ்; வனத்துறை அதிகாரிகள் சிறப்பு கவனிப்பு

மேலும், நீட் தேர்வு தேவை கிடையாது. சமூக நீதிக்கும், கிராமபுற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும். குறைந்தது தமிழகத்திலாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய நோக்கம் பாமக கூட்டணி சேர்ந்ததற்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்துள்ளார். இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக உலகளவில் எடுத்து செல்வார். அதே போல் மருத்துவர் ராமதாஸ் சொல்வதை போல் இந்தியா சார்ந்த சமூக நீதி பிரச்சினைகளை வலியுறுத்தி தீர்வு காண்போம். காவிரி நீர் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனை தீர்க்க முயற்சி செய்வோம்.

நிதித்துறை அமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்

காவிரி தமிழ்நாட்டின் உயிர் நாடி பிரச்சனை. 50 லட்சம் விவசாயிகள், 4 கோடி மக்கள், 22 மாவட்டங்கள் பயனடைகிறது. இரு மாநிலங்களும் சுமூக தீர்வு  காண வேண்டும். அங்கு காங்கிரஸ் ஆட்சி, இங்கு திமுக கூட்டணி ஆட்சி. இதற்கு தீர்வு வேண்டும். தமிழக முதல்வர் போதை பொருளை மும்முரமாக ஒழிப்பதாக சொல்கிறார். ஆனால் செயலில் ஒன்றுமில்லை. நான் முதல் சந்திப்பில் முதல்வரிடம் போதை பொருள், கஞ்சா, அபின் போன்றவைகளை ஒழிக்க மாதம் தோறும் கூட்டம் நடத்தி ஒழிக்க சொன்னோன். 

ஆனால் கஞ்சா 1.0, 2.0 என சொல்லி 5 ஆயிரம் பேரை கைது செய்வார்கள். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துவிடுவார்கள். மதுவை விட கஞ்சா போதை பொருள் பிரச்சினையால் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். இதனை தடுக்க தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios