செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி..!
செஞ்சியை அடுத்த வளத்தி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், ராஜேந்திரன், மனைவி சாந்தி மற்றும் அழகு ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கீரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (60). இவரது தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் உயிரிழந்தார். நேற்று அவருக்கு 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி (52) மகன் அழகுவேல் ராஜா, மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி (22) ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.
இதையும் படிங்க;- கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 40 பேர் படுகாயம்.!
இந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், ராஜேந்திரன், மனைவி சாந்தி மற்றும் அழகு ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் சகுந்தலா தேவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த சகுந்தலா தேவியை மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!