வாழைப்பழத்துக்கு காசு கேட்டது குத்தமா? குடிபோதையில் சேட்டகன்கள் செய்த காரியம்.. விழுப்புரத்தில் பயங்கரம்..!

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (29). இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். 

2 people including a banana seller were stabbed in Villupuram

வாங்கிய வாழைப் பழத்திற்கு பணம் கேட்ட வாழைப்பழ வியாபாரி உள்ளிட்ட இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (29). இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஏண்டா! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டிய! ரவுடி மனைவியுடன் உல்லாசம்! சென்னையில் இளைஞர் ஓட ஒட விரட்டி படுகொலை!

2 people including a banana seller were stabbed in Villupuram

அப்போது அங்கு கேரளாவை சேர்ந்த 3 பேர் பணம் இல்லாமல் வாழைப்பழம் கேட்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்தனர். மேலும் வாழைப்பழக்கடை காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் விழுப்புரம் மருதூரை சேர்ந்த சரவணனின் நண்பரான காமராஜ் உள்ளிட்ட 2 பேர் அங்கு வாழைப்பழம் வாங்க வந்தனர். அப்போது அவர்கள் வெளி மாநிலத்தவர் தகராறில் ஈடுபட்டது கண்டு அவர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால்,  அவர்களுக்கும், வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த வெளிமாநில வாலிபர்களில் ஒருவர், அவன் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற கமாராஜையும் அந்த வடமாநில வாலிபர் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க:  அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு!

2 people including a banana seller were stabbed in Villupuram

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் வெளிமாநில வாலிபர்கள் 3 பேரில் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதல் சிகிச்சை கொடுத்து அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்  விழுப்புரத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios