தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்? விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
விக்கிரவாண்டி தொகுதியில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று முதல் அம்மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
விக்கிவாண்டியில் வாக்குச்சாவடி மையத்தில் பெண்ணுக்கு கத்தி குத்து; போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
இதனிடையே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயத்தை முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாராயம் குடித்த 11 நபர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூரில் சிறுமிக்கு கட்டாய திருமணம்? திருமணமான 3 மாதத்தில் சிறுமி விபரீத முடிவு
முன்னதாக கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 66 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் தொடர்பான விசாரணையும் சிபிசிஐடி மூலம் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் மீண்டும் சாராயம் குடித்து 11 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.