ஓசூரில் சிறுமிக்கு கட்டாய திருமணம்? திருமணமான 3 மாதத்தில் சிறுமி விபரீத முடிவு
ஓசூர் அருகே திருமணமான 3 மாதத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தட்டசந்திரம் கிராமத்தில் வசிப்பவர் வரும் அஜித்(வயது 21) டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த BCA முதலாமாண்டு படித்து வந்த திவ்யபிரியா(17) என்னும் சிறுமிக்கும் கடந்த மார்ச் 21ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜகவை பாதுகாத்தவர் யார்? அடுக்கடுக்கான சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி!
இந்த திருமணத்தில் திவ்யபிரியாவிற்கு விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் திவ்யபிரியா வீட்டில் இருந்த தென்னை மரத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு திவ்யபரியா உயிரிழந்தார்.
தனியார் ஆம்னி பேருந்துகளை அலறவிடும் அரசு பேருந்து.. அசர வைக்கும் வசதிகள்.. என்னென்ன தெரியுமா?
சிறுமி தற்கொலை குறித்து ரத்தினகிரி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன்(30) கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், திவ்யா பிரியா 18 வயது நிரம்பாமல் இருவீட்டார் இளம் வயது திருமணம் செய்துள்ளதாகவும், திவ்யா பிரியா சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டுவதாக கூறி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கெலமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்து, தற்கொலைக்கு தூண்டியதாகவும், சிறுமியை திருமணம் செய்ததாக அஜித்தை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்த வழக்கில் அஜித்தின் தாய், தந்தை என மூன்று பேரை கைது செய்துள்ளனர். திருமணமான மூன்று மாதத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் ஒசூர் சப் கலெக்டர் பிரியங்கா பெற்றோர்களிடம் விசாணை மேற்கொண்டு வருகிறார்.