திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண் பல் மருத்துவரிடம் பணியில் இருந்த மருத்துவர் ஆபாசமாக பேசியதால் ஆத்திரமடைந்த பெண் மருத்துவரின் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 24 மணி நேரமும் இயங்கும் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வயிற்று வலி என போஸ்கோ நகரை சேர்ந்த பல்மருத்துவர், அர்ச்சனா என்பவர் சிகிச்சைகாக சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர் தியாகராஜன் என்பவர் அர்ச்சனாவிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் மருத்துவர் தியாகராஜனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயலட்சுமியின் உணவில் மாத்திரைகளை கலந்து கொடுத்து கருச்சிதைவு ஏற்பட செய்தவர் சீமான் - வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில் இது தொடர்பாக பெண் பல் மருத்துவர் கூறுகையில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர் பேண்ட கழட்டு என்று கூறி ஆபாசமாக பேசத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன். மேலும் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.