இனி புள்ளைங்களை ரேப் பண்ணுவியா... கதறும் இளைஞர்.. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!
பல பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறி வாலிபர் ஒருவரை கட்டிவைத்து அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறி வாலிபர் ஒருவரை கட்டிவைத்து அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் பாலியல் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இதுபோன்ற ஒரு வீடியோ வாட்ஸ்அப்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த இந்த வாலிபரால் 100 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சரிதானே என்கிற தலைப்பில் வீடியோ உலா வந்து கொண்டு இருந்தது.
அதில் 20 வயதுள்ளவரை ஒரு வீட்டில் கை, கால்களை கட்டி குப்புற படுக்க வைத்து தடியால் அடிக்கின்றனர். பின்னர் உட்கார வைத்தும் அடிக்கின்றனர். இதில் அவருக்கு முகமெல்லாம் வீங்கி ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இனி புள்ளைங்களை ரேப் பண்ணுவியா என்று கேட்டு, கேட்டு அடிக்கின்றனர். அவர் ரேப் பண்ண மாட்டேன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறார். பின்னர் செருப்பை தலையில் வைத்தும், ரேப் பண்ணுவியா எனக்கேட்டும் அடிக்கின்றனர்.
மேலும், வீடியோவில் தோன்றும் வாலிபரின் கை, கால்களை கட்டி முகம் மற்றும் கால்களில் தாக்கி இருந்ததில் ரத்த காயங்கள் இருந்தன. காயத்துடன் கிடக்கும் வாலிபரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியும், பெண் பிள்ளைகளை நாசம் செய்வியா? என கேட்ட ஆடியோவும் பதிவாகி உள்ளது.
இதுபற்றி திருச்சி மாநகர போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருச்சியை சேர்ந்த இந்த வாலிபரால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் குடும்பத்தினர்தான் இவ்வாறு அவரை அடித்து உதைப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வரும்படி கூறினர். இதேபோல் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்ட பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் விசாரணைக்கு அழைத்து உள்ளனர். இரு தரப்பினரும் விசாரணைக்கு வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபின்னரே வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் உண்மையானதா என்பது உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.