கூட்டத்தில் சலசலப்பு - பாதியில் வெளியேறிய திருநாவுக்கரசர் எம்.பி.!
மக்களிடம் மனு பெரும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வார்டு வாரியாக மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி மனுக்களை பெற்று வருகிறார். அந்தவகையில், திருச்சி மாநகராட்சி 12ஆவது வார்டுகுட்பட்ட மேலசிந்தாமணி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அங்கு வந்த காங்கிரஸ் பிரமுகரான முகமதுஆரிஸ் என்பவர், அண்ணா சிலை பகுதியில் உள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவில்லையே என கூறி வாக்குவாதம் செய்தார். அதற்கு மக்கள் கோரிக்கைகள் படிபடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையும் போலீஸாரிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.
100 நாள் வேலை அட்டை பதிவு செய்ய 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொறுப்பாளர் - வைரல் வீடியோ
ஆனாலும், எம்.பி., பேச்சில் திருப்தியடையாத முகமது ஆரிஸ் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, இத்தனை நாள் வராத நீங்கள் இப்போது எதற்கு வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம் செய்தவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை.
தொடர்ந்து பெறப்படும் அனைத்து மனுகளும் தீர்வு காணப்பட்டு வருகிறது திருநாவுக்கரசர் என கூறியும் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் குறைதீர் கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு பொதுமக்களிடம் கூட மனுக்களை பெறாமல் அங்கிருந்து திருநாவுக்கரசர் எம்.பி., திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.