தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்.. லாரி - ஆம்னி பேருந்து மோதல்.. 34 பயணிகளின் நிலை என்ன?
சென்னையில் இருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து திருச்சி சஞ்சீவி நகர் அருகே வந்துக்கொண்டிருந்த போது முன்னால் சென்ற செங்கல் லாரியை முந்தி செல்ல முயன்றது.
திருச்சி தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து திருச்சி சஞ்சீவி நகர் அருகே வந்துக்கொண்டிருந்த போது முன்னால் சென்ற செங்கல் லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத இபிஎஸ் எதுக்கு அதிமுகவிற்கு தலைமை ஏற்குறீங்க? வச்சு விளாசும் கே.சி.பழனிசாமி!
இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஆகிய இரண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமாக அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாஜகவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு பாதுகாப்பு வேண்டுமா? கடுப்பான நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?