தாறுமாறாக பாய்ந்த கார்... சாலையோரம் தூங்கிகொண்டிருந்த 3 பேர் பலி

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே தாறுமாறாக ஓட்டிவந்த கார் சாலையோரம் தூங்கிகொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

Three people sleeping on roadside died in the car rampage

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் சாலையில் சனிக்கிழமை இரவு கார் ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தறிகெட்டு பாய்ந்த அந்தக் கார் சாலையோர நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறிச் சென்றது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாநகர போக்குவரத்து போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணைக்குப் பின் இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

போதைக்கு அடிமையானவரை தலைகீழாக நிறுத்தி அடித்துக் கொன்ற கொடூரம்!

காரை தாறுமாறாக ஓட்டிவந்தவர்கள் திருச்சி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் லட்சுமி நாராயணன் (23) மற்றும் அஸ்வந்த் (21) என்று தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் போதையில் இருந்ததால் காரை கன்னாபின்னாவென்று ஓட்டினார்களா அல்லது வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து நேரிட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே உயிரிழந்தவர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் பிச்சை எடுத்துவந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அம்மா மண்டபம் படித்துறையில் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் உள்ளனர். அவர்கள் இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் தங்கி உறங்குகிறார்கள். காரை வேகமாக ஓட்டி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மேல் ஏற்றிக் கொன்றவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் கூறுகின்றனர்.

Same Sex Marriage: தன்பாலின திருமணத்தை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios