Asianet News TamilAsianet News Tamil

திருச்சி எஸ்.பி.யின் தலைக்கு குறிவைத்து இன்ஸ்டாவில் மிரட்டல் பதிவு; சிறார்களை கண்டித்து அனுப்பிய போலீஸ்

திருச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளம் சிறார்களை காவல் துறையினர் கண்டித்து அனுப்பினர்.

The police alerted the minors who threatened to kill the Superintendent of Police in Trichy vel
Author
First Published Jun 13, 2024, 10:33 AM IST

திருச்சியில் கடந்த நவம்பர் 22ம் தேதி பிரபல ரவுடியும் ஏ ப்ளஸ் குற்றவாளியாக இருந்த கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம்  இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "விரைவில் தலைகள் சிதறும்" என "Komban Brothers" என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டாகிராம்  ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயதுடைய 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சிறுவனை அழைத்து விசாரணை செய்தபோது, இதில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

கடன் மற்றும் குடும்ப பிரச்சினையால் நிம்மதி இழந்த காவலர்; விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் விபரீத முடிவு

மூவரும் இளஞ்சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய நபரை தேடிவருகின்றனர். இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வாக்கு எண்ணிக்கையா? பொய் பிரசாரத்தை இத்தோடு நிறுத்துங்கள் - தேமுதிகவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூன்று சிறார்கள் பெற்றோர்களை எஸ் பி அழைத்து அறிவுரை வழங்கினார். முன்னதாக மூன்று சிறார்கள் வழக்கு பதிவு செய்து அறிவுரையுடன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று நேரடியாக இந்த செயலில் ஈடுபட்ட சிறார்களின் பெற்றோர்களிடம்  திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுபோன்ற செயல்களை தங்களது பிள்ளைகளை ஈடுபடாமல் வைப்பதற்கு நல்வழியை காட்டுங்கள் என அறிவுரை செய்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios