பள்ளி மாணவனை காலால் உதைத்து கொடூரமாக தாக்கும் சக மாணவியின் தந்தை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..

திருச்சி அருகே பள்ளியில் மாணவனை சக மாணவியின் தந்தை காலால் உதைத்து தாக்கும் கொடூர காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The father of a fellow student brutally kicks a school student with his foot in Trichy.. Shocking video goes viral.. Rya

இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டிய பெற்றோரே பல தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிள்ளைகளுக்காக ஆசிரியர்களை தாக்குவது அல்லது சக மாணவருக்கு விஷம் கலந்து கொடுப்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் நடந்த மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை  வையம்பட்டி அருகே உள்ள கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் டார்வின் விஜய்(8) சிறுவனை அதே பள்ளியில் படித்து வரும் மாணவியின் தந்தை வின்சென்ட்ராஜ் என்பவர் பள்ளிக்குள் நுழைந்து சிறுவனை தகாத வார்த்தையில் திட்டியும் காலால் எட்டி உதைத்தும் உள்ளார். அப்போது ஆசிரியை தடுத்தும் சிறுவனை தாக்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதை தொடர்ந்து சிறுவனின் தந்தை அருளப்பன் என்பவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சூழலில் அந்த சிறுவனை வின்சென்ட்ராஜ் காலால் உதைத்து தாக்கும் கொடூர வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குழந்தை பருவத்தில் மாணவர்களுக்கு முன்னுதராணமாக இருக்க வேண்டிய பெற்றோரே பள்ளி மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் 27ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios