Mobile Snatching: திருச்சியில் செல்போன் பறிப்பில் சிறுவர்கள்; காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓட்டம்
திருச்சியில் செல்போன் பறித்து சென்ற சிறுவர்களை பிடிக்க முயன்ற காவலருக்கு அறிவாள் வெட்டு - தப்பி ஓடிய சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் நடைபெறக்கூடிய குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருச்சி பீம்நகர், மாசிங்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்காதர்.
இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சிந்தாமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் ஒருவர் தன்னிடம் இருந்து சிறுவர்கள் சிலர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடியதாக புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அப்துல்காதர் காவிரி பாலம் அருகே ஓடத்துறை செல்லும் பகுதியில் சிறுவர்கள் சிலர் நின்றிருந்தனர்.
4 பெண்களுடன் குடும்பம் நடத்தியும் ஆசை தீரல; 17 வயது சிறுமியுடன் ஓட்டம் பிடித்த நபர் போக்சோவில் கைது
அவர்களை அழைத்து விசாரணை செய்து போது திடீரென அந்த சிறுவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அப்துல்காதரை தலை மற்றும் கைப்பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். வெட்டுப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட அப்துல்காதர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சிந்தாமணி அண்ணாசாலைப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வாசலிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
இதனை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனை உள்ளே அழைத்துச் சென்றனர். உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே காவலரை வெட்டி விட்டு தப்பி சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் தற்போது இரண்டு இளைஞர்களை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சிலர் சிந்தாமணி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.