24 மணிநேரத்திற்கு மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பிறகு பனிக்காலம் தொடங்கிய நிலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. பகலில் அதற்கு நேர்மாறாக வெயில் வாட்டி வதைத்து வெப்பம் தாக்கியது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து உள் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் சில இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியிருக்கிறார்.
அரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி..!
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் பொதுமாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.