Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி வருகை.. திருச்சியில் இன்று காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம்.! இதோ விவரம்..!

திருச்சியில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சிக்கு வருகை தர உள்ளார். பிரதமர் மோடி வருகையை அடுத்து திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Prime Minister Modi visit.. Traffic change in Trichy tvk
Author
First Published Jan 2, 2024, 7:56 AM IST

பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று காலை 7 மணி முதல் திருச்சியில் போக்குவரத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சிக்கு வருகை தர உள்ளார். பிரதமர் மோடி வருகையை அடுத்து திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போக்குவரத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலி மலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

இதையும் படிங்க;- பரபரக்கும் அரசியல் களம்.. இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறார்.. விட்டதை பிடிப்பாரா?

திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக் கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios