5ம் வகுப்பு வரை 15 நாட்களுக்கு விடுமுறை..! முதல்வர் அதிரடி..!

தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு(எல்.கே.ஜி  முதல் முதல் 5ம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை உத்தரவிடப்பட்டுள்ளது.

Primary and nursery schools in tamilnadu will not opened till march 31st

உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருகின்றனர். சீனாவில் மட்டும் 3,177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

Primary and nursery schools in tamilnadu will not opened till march 31st

தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் மழழையர் பள்ளிகள் மற்றும் கேரளா மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. பின் நேற்று காலையில் அந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கபட்டது. இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு அறிவித்தபடி விடுமுறை 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை அளிக்கபடும் என்றார். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

வெளிமாநிலங்களுக்கு போகாதீங்க..! முதல்வர் வேண்டுகோள்..!

Primary and nursery schools in tamilnadu will not opened till march 31st

அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு(எல்.கே.ஜி  முதல் முதல் 5ம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடுவதை பெற்றோர் தவிர்த்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios