வெளிமாநிலங்களுக்கு போகாதீங்க..! முதல்வர் வேண்டுகோள்..!
தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கபடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் ஆகியவற்றையும் தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.
கொரோனா பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லையொர மாவட்டங்களில் இருக்கும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கபடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் ஆகியவற்றையும் தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.