ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சீதனத்தை அயோத்தி ராமர் பாதத்தில் வைத்து வழிபட்ட பிரதமர் மோடி
ஶ்ரீரங்கம் கோயிலில் வழங்கப்பட்ட சீதனத்தை பிரதமர் மோடி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவின்போது குழந்தை ராமர் பாதத்தில் வைத்து வழிபட்டார்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்வதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட வஸ்திரங்களை பிரதமர் மோடி நேற்று (திங்கட்கிழமை) ராம் லல்லா பாதத்தில் சமர்ப்பித்தார்.
அண்மையில் மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய முறையில் வேட்டி அணிந்து வந்து திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஜனவரி 20ஆம் தேதி பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை திருச்சி ஶ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் சாமி தாரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
250 கோடி ஆண்டு பழமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட அயோத்தி ராம் லல்லா சிலை!
முக்கிய சன்னிதிகளின் தரிசனம் செய்துவிட்டு, கோயில் யானை ஆண்டாளிடமும் ஆசி பெற்றார். யானை ஆண்டாள் மவுத் ஆர்கன் வாசிப்பதையும் கேட்டு மகிழ்ந்தார். பின், கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணம் செய்வதைக் கேட்டார்.
தரிசனம் செய்துவிட்டு செல்லும்போது பிரதமர் மோடிக்கு ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்குக் கொண்டு செல்வதற்காக வஸ்திரங்கள் சீதனமாக வழங்கப்பட்டன.
தமிழகப் பயணத்தை முடித்துவிட்டு, அயோத்தி சென்ற பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற அங்கு ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்துகொண்டார். அப்போது, ஶ்ரீரங்கம் கோயிலில் வழங்கப்பட்ட சீதனத்தை குழந்தை ராமர் பாதத்தில் வைத்து வழிபட்டார்.
ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் புதிய ஹீரோ மாவ்ரிக் 440 அறிமுகம்! விரைவில் புக்கிங் ஆரம்பம்!