திருச்சி அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் மாயம் - காவல்துறையினர் விசாரணை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருமணமான 5 மாத்தில் இளம் பெண் மாயமானது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள சூரியூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). இவருக்கு கடந்த 5மாதங்களுக்கு முன்பு நிர்மலா(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான பொழுதில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்து வந்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக தம்பதியினருக்குள் பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனவேதனை அடைந்த நிர்மலா, கணவர் பிரேம்குமார் வேலைக்கு சென்று இருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வீட்டிற்கு வந்த பிரேம்குமார் மனைவி இல்லாததால் அவர் கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என நினைத்து அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவரது மாமியார் வீட்டில் மனைவி நிர்மலா வரவில்லை என தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்த நிர்மல்குமார். இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிர்மலா எங்கே சென்றார்? என்ன ஆனார் என விசாரணை மேற்கொண்டு மாயமான நிர்மலாவை தேடி வருகின்றனர்.
திருச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்