21 மணி நேரத்தை கடந்த மீட்பு பணிகள்..! அசராமல் போராடும் பேரிடர் படை வீரர்கள்..!

குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து 21 மணி நேரம் கடந்து வீட்ட நிலையிலும் மீட்புப்பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது.

more than 21 hours crossed in the rescue operation of sujith

திருச்சி அருகே இருக்கும் மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளான். நேற்று மாலை 5.40 மணியளவில் விழுந்த குழந்தையை மீட்க உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்தனர். ஆழ்துளைக்கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் மீட்பதற்காக கருவிகளை கண்டுபிடித்திருக்கும் வல்லுனர்களும் வரவழைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

more than 21 hours crossed in the rescue operation of sujith

முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை தற்போது 70 , 80 அடி வரையில் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. காலை 5.30 வரையிலும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் அதன் பிறகு குழந்தையின் உடலில் எந்தவித அசைவும் இல்லை என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார்.

more than 21 hours crossed in the rescue operation of sujith

இந்தநிலையில் தேசிய மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒன்றரை மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டு விடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்னர். குழந்தை பத்திரமாக வெளியே வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் Save Sujith, Pray for sujith ஹஸ்டேக்களும் பரபரப்பட்டு வருகிறது.

more than 21 hours crossed in the rescue operation of sujith

21 மணி நேரமாக குழந்தை சுஜித்தை மீட்க நடக்கும் போராட்டம் எந்த வித பின்னடைவும் வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: இரவில் இருந்து களத்தில் நிற்கும் அமைச்சர்கள்..! தொடர்ந்து போராடி வரும் மீட்பு படையினர்..!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios