எடப்பாடி பழனிச்சாமியின் தரம் அவ்வளவு தான் - அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.
நாமக்கல்லில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை; பெண்ணின் தந்தைக்கு தீவிர சிகிச்சை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேகமாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 19 நிறுவனங்கள் திருச்சியை சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த முகாமில் பதிவு செய்தவர்கள் 154 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் முதல்கட்டமாக 15 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
ராணிபேட்டையில் பயங்கரம்: குடும்ப தகராறில் மனைவி கொடூர கொலை; நாடகமாடிய கணவன் கைது
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் புதிய வகையான காய்ச்சல் குறித்து தெளிவாக தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் தளபதி ஸ்டாலின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று எங்களை போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்தவில்லை. நீதிமன்றத்தை மட்டும் தான் அணுகினோம். எடப்பாடி பழனிச்சாமியின் தரம் அவ்வளவுதான் அவர் அப்படித்தான் பேசுவார் என்றார்.