திருவானைக்கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி - போலீசார் விசாரணை
திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை.
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே பாலத்தை கடக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக ரயில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரியில் பிரபல உணவக சாம்பாரில் மிதந்த குட்டி எலி; உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் பலியான பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.