Asianet News TamilAsianet News Tamil

நீலகிரியில் பிரபல உணவக சாம்பாரில் மிதந்த குட்டி எலி; உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

நீலகிரியில் பிரபல தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் எலி இறந்து கிடந்த நிலையில், உணவகத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

food and safety officers sealed private hotel for unhygienic in nilgiris vel
Author
First Published Oct 14, 2023, 1:20 PM IST

இராணுவத்தில் பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் உணவருந்த சென்றுள்ளனர்.

அப்போது இவர்களுக்கு  வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் சிறிய எலிக்குட்டி  கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உணவக மேலாளரிடம் கேட்டபோது  அஜாக்கிரதையாக பதில் அளித்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சுற்றுலாப் பயணி சம்பந்தப்பட்ட உணவகம் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரை வீடியோ மூலம் பதிவு செய்து வெளியிட்டார்.

நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீ பற்றியதால் பரபரப்பு

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்த குமாரிடம் கேட்ட போது  வீடியோவில்  பார்த்த வரை  இது வெண்டைக்காயில் இருந்த  புழு என்றும் எலிக்குஞ்சுப் போல் தெரியவில்லை என்றும், இருப்பினும் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதிகாரிகளின் அலட்சிய பதிலால் உணவகத்துடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதை உணர முடிவதாகவும், உதகைக்கு நம்பி வரும் சுற்றுலாப் பயணிகளின் உணவு தேவையை ஆரோக்கியத்துடன் இங்குள்ள உணவகங்கள்  வழங்குவதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி கோரிக்கை

பின்னர் நேற்று மாலை இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு சமையல் அறை, உணவு பயன்பாட்டு உபகரணங்கள், குடிதண்ணீர் ஆகியவற்றை ஆய்வு மேற்க் கொண்டு, பழைய கோழி இறைச்சி உள்ளிட்டவைகளை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஒருவார காலம் உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

உணவகத்தில் தூய்மைப் பணிகளை முறையாக செய்த பின் தரச் சான்றிதழ் பெற்று உணவகத்தை திறக்க அறிவுறுத்தி சென்றார். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே உணவகங்களில் உணவு உட்கொள்ள பெரும் அய்யத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios