தைரியம் இருந்தா.. இதுமாதிரி மசூதி.. சர்ச்ல சொல்லிப் பாருங்களே உதயநிதி.. மன்னார்குடி ஜீயர்..!

அரசு என்பது சாதி, மதங்களைக் கடந்து பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றார். அரசாங்கம் என்பது அரசாங்கமாக இருக்க வேண்டும். சாதி, மதம் பார்ப்பதாக இருக்கக்கூடாது. 

mannargudi jeeyar challenge to Minister udhayanidhi stalin tvk

சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய இவர்கள் வாழ்க்கை ஈசல் போல தான். சிறிது காலமே நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதியை குறிப்பிட்டு மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறியுள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனா, போன்று சனாதனத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என ஒரு தரப்பும், மற்றொரு தரப்பு சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத்தான் பேசியுள்ளார் என கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க;- மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.? அன்று கருணாநிதி பேசிய வீடியோ இன்று வைரல்.!

mannargudi jeeyar challenge to Minister udhayanidhi stalin tvk

இதுதொடர்பாக திருச்சியில் பேட்டியளித்துள்ள மன்னார்குடி  ஜீயர்;- அரசு என்பது சாதி, மதங்களைக் கடந்து பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றார். அரசாங்கம் என்பது அரசாங்கமாக இருக்க வேண்டும். சாதி, மதம் பார்ப்பதாக இருக்கக்கூடாது. உதயநிதிக்கு தைரியம் இருந்தால் சர்ச், மசூதிக்குள்  சென்று உங்களுடைய தர்மத்தின் இருக்கக்கூடிய தவறை சரி செய்யுங்கள் என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க;- சனாதன பேச்சை மோடி அறிந்தே பேசுகிறா.? அறியாமல் பேசுகிறாரா.? உதயநிதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்

mannargudi jeeyar challenge to Minister udhayanidhi stalin tvk

அப்படி சொல்லக்கூடிய தெரியம் இருந்தால் அவர் சனாதனத்தை பற்றி பேசட்டும். அமைச்சராக நீடிக்கட்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய இவர்கள் வாழ்க்கை ஈசல் போல தான். சிறிது காலமே நிலைத்திருக்கும்.  இந்து மதத்திற்கும், இந்துகளுக்கும் விரோதமானவர்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் ஓட்டுக்காக மதப் பிரச்சனைகளை தூண்டி விடுகின்றனர். சனாதன தர்மம் என்பது எங்கள் தாய்க்கு இணையானது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து வடமாநில சாமியார் பேசியதில் தவறில்லை என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios