Asianet News TamilAsianet News Tamil

மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.? அன்று கருணாநிதி பேசிய வீடியோ இன்று வைரல்.!

சனாதனம் குறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

What is Sanathanam ? The video of Karunanidhi speech on that day is viral today tvk
Author
First Published Sep 7, 2023, 1:14 PM IST

சனாதனம் குறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கொரோனா டெங்கு உள்ளிட்டவற்றை ஒழித்தது போல, சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது. இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 260 பேர் உதயநிதி மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், டெல்லி, பீகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

What is Sanathanam ? The video of Karunanidhi speech on that day is viral today tvk

சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என ஒரு தரப்பும், மற்றொரு தரப்பு சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத்தான் பேசியுள்ளார் என கூறி வருகின்றனர். 

What is Sanathanam ? The video of Karunanidhi speech on that day is viral today tvk

இந்நிலையில், சனாதனம் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சூத்திரன் சும்மா படிக்கக்கூடாது என்றால் கேட்போமா அதனால், படித்தால் பாவம் என்றார்கள். வெறும் பாவம் என்றால் பயப்படமாட்டோம் அல்லவா, ஆகையால் படித்தால் நரகத்திற்கு போவோம் என்றார்கள். அதையும் மிஞ்சி யாராவது படிக்க வந்தால், அவரை பிடித்து அவரின் நாக்கை இழுத்து வைத்து கொல்லிக்கட்டையால், பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டார்கள். 

இது செய்தியாக மாத்திரம் அல்ல. இன்றைக்குக்கூட நீங்க மனுதரம் சாஸ்திரத்தை எடுத்து படித்து பாருங்கள். அதில் என்ன எழுதி இருக்கிறது என்றால் சூத்திரன் ஒருவன் படித்தால், அவனது நாக்கை இழுத்து வைத்து பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டு பொசுக்க வேண்டும் என எழுதப்பட்ட மனுதர்ம  சாஸ்திரம்

 இன்றும் கொளுத்தப்படாமல் நூலகத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அது கொளுத்தப்படவில்லையே தவிர, அதில் உள்ள கருத்துக்களை கொளுத்தியவர் பெரியார். அதில் உள்ள கருத்துக்களை காலில் போட்டு மிதித்தவர் பேரறிஞர் அண்ணா. அதில் உள்ள கருத்துக்களை கடலில் தூக்கி எறிந்தவர் அம்பேத்கர். இவர்களை எல்லாம் நீங்கள் மறந்துவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios