Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே அதிக பாரத்துடன் வந்த லாரி ஒன்றின் பேரிங் திடீரென முறிந்த நிலையில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் லாரி கவிழ்வதும் தடுக்கப்பட்டு உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

lorry accident in trichy
Author
First Published Jan 14, 2023, 12:12 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து நேற்று மாலை மர துண்டுகளை ஏற்றிக்கொண்டு திருச்சி வழியாக சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை ராம்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கோவில்பட்டியில் உதவி ஆய்வாளருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்

இந்த நிலையில் கீரனூரில் இருந்து சமயபுரம்  நம்பர்  1 டோல்கேட் பகுதிக்கு அதிகாலை லாரி வந்தது, அதிக பாரம் ஏற்றி வந்ததால் லாரியின் பேரிங் உடைந்து லாரி ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் ராம்குமார் உடனடியாக லாரியை நிறுத்தி பெரிய மரத்துண்டுகளை பயன்படுத்தி லாரியை கவிழாமல் தடுத்துக் கொண்டார். மேலும் சக தொழிலாளர்களைக் கொண்டு லாரியில் உள்ள மரத்துண்டுகளை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் காதலனை மிரட்டி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

வழக்கத்தை விட அதிகமாக பாரம் ஏற்றி வந்த லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் லஞ்சம் பெற்றுகொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்களும் சமூக அலுவலரும் குற்றம் சாட்டினர்.

ஒரு பக்கம் அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக ஓட்டுநரை திட்டிய சக வாகன ஓட்டிகள், பெரும் விபத்தை தவிர்த்ததற்காக ஓட்டுநருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios