பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த ஊரில் 144 தடை உத்தரவு; மோதலை தவிர்க்க அதிகாரிகள் அதிரடி

கோவில் திருவிழா தொடர்பான பிரச்சினையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மோதலை தடுக்கும் விதமாக திருச்சி லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Law and order issue section 144 implemented for anbil surrounding in trichy district

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழ அன்பில் ஆகிய 3கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கட்டுத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 20ம் தேதி கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெற வேண்டும். 

ஆனால், ஒரு சமூகத்தினர் தங்களது தெருவுக்கும் சாமியை திருவீதி உலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் கோவில் திருவிழா நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கலவரத்தை சுட்டிக்காட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆர்.டி.ஓ.வுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே மங்கம்மாள்புரம், சக்கமராஜபுரம், கீழ அன்பில் பகுதியில் உள்ளவர்கள் குடும்பத்திற்கு இரண்டு பேர் வீதம் நேற்று மாலை 5 மணிக்கு கூடி ஆசிரம வள்ளியம்மன் கோவிலிலும், சிவன் கோவிலிலும் அதிகாரிகள் காப்பு கட்டும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதனால் அந்த கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மங்கம்மாள்புரம், ஜக்கமா ராஜபுரம், கீழ அன்பில் மற்றும் கோவில்கள் உள்ள பகுதிகளில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்க திருச்சி இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் பரிந்துரை செய்தார்.

வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டி கேட்ட சிறை கைதி; உணவகமே அமைத்து கொடுத்த தன்னார்வலர்கள்

பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரமவள்ளியம்மன் கோவிலில் தற்போது தேர் திருவிழா நடத்தினால் இருதரப்பினரிடையே சாதிப் பிரச்சினை ஏற்படும்.  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி லால்குடி தாலுக்கா மங்கம்மாள்புரம், சக்கமராஜபுரம் மற்றும் கீழ் அன்பில் ஆகிய வருவாய் கிராமங்களில் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144 தடை உத்தரவு பிறப்பித்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவு வரும் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

நூலிழையில் உயிர் தப்பிய காட்டு யானை; வெளியான அதிர்ச்சி வீடியோ

இந்தத் 144 தடை உத்தரவினால் ஆசிரம வள்ளியம்மன் கோவில் சிவன் கோவில் உள்ளிட்ட கீழ அன்பில், மங்கம்மாள்புரம், ஜக்கம்மாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios