Asianet News TamilAsianet News Tamil

“ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்” வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்

ஜல்லிக்கட்டு ஒரு கலாசாரம் சார்ந்த நிகழ்வு என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜல்லிக்கபட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து திருச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நீதிமன்ற தீர்ப்பை வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

jallikattu players celebrate on supreme court verdict about jallikattu in tamil nadu
Author
First Published May 18, 2023, 4:16 PM IST

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாராம்பரியம். அந்த வகையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டியானது தடையில்லாமல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. 

இதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பொறுமை இழந்த தமிழக இளைஞர்குளு், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் 2017ம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பேராட்டத்தை அடுத்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி 3 பேர் கவலைக்கிடம்

ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்  விவாதங்களும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்புகள் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது, பீட்டா தரப்பில், ”நாங்கள் 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை. இதுஒரு கொடூரமான விளையாட்டு. ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன” என்றும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாசார நிகழ்ச்சி என்றும், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழைக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு, கேளிக்கை அல்ல. வரலாற்று நிகழ்வு என்று" என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடியது.

நீலகிரியில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்ட 2 காட்டு யானைகள்

இவ்வாறாக அனைத்து தரப்பு வாதங்களும் நடத்து முடிந்து, தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது நிலையில் இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது.

இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் ஜல்லிக்கட்டு என்பது கலாசாரம் சார்ந்தது எனவே அதில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மேலும் தமிழக அரசு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது செல்லும். இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எந்தவித தடையும் இல்லை எனக் கூறி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios