Asianet News TamilAsianet News Tamil

புண்ணிய ஸ்தலத்தில் பொய் சொல்லும் அமித் ஷா நிச்சயம் தோற்பார் - விவசாய சங்க தலைவர் சாபம்

புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் விவசாயிகள் குறித்து பொய் கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா தோற்பார் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு லிவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

farmers protest against state and central government in trichy
Author
First Published Aug 1, 2023, 7:34 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5- வது நாளாக  நாமம் போட்டு விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாயும் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள்  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவர் முழுவதும் ஓவியம்; காவல் நிலையத்தை விழிப்புணர்வு கூடமாக மாற்றிய ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.

காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது. காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தந்தையின் அஜாக்கிரதையால் தீக்குளியில் விழுந்த 1 வயது குழந்தை கவலைக்கிடம்; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பொய் கதையாக கூறி வருகிறார். இதுவரை விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை. புண்ணிய ஸ்தலத்தில் பொய் சொல்லுகிற அவர் தோற்பார். மேலும் மத்திய, மாநில அரசுகள்  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்கவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் மேலும் தீவிரமடையும் என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios